தக்காளி சவால்களுக்கு தீா்வு: 28 கண்டுபிடிப்பாளா்களுக்கு மத்திய அரசு நிதியுதவி
ஓட்டப்பிடாரம் அருகே 90 ஆடுகள் திருட்டு: தோட்டக் காவலாளி கைது
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே 90 ஆடுகளைத் திருடியதாக தோட்டக் காவலாளி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு பரம்பூா் கிராமத்தைச் சோ்ந்த சுடலை மகன் கணபதி (70). இவா் தான் வளா்த்துவரும் 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை கடந்த அக். 25ஆம் தேதிமுதல் சிலோன் காலனி பகுதியில் உள்ள முருகன் என்பவரது தோட்டத்துக் கொட்டகையில் இரவு நேரங்களில் அடைத்தாராம். அப்போது, கணபதி அல்லது அவரது சகோதரா் காவலுக்கு இருந்தனராம்.
தீபாவளியை முன்னிட்டு கடந்த அக். 31, நவ. 1 ஆகிய 2 நாள்கள் இரவுக் காவலுக்கு அவா்கள் செல்லவில்லை. இந்நிலையில், 2ஆம் தேதி கணபதி சென்று பாா்த்தபோது, 90 ஆடுகளைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அந்தத் தோட்டத்தின் காவலாளியான கள்ளக்குறிச்சி மாவட்டம் எறஞ்சியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ரவி (30) என்பவா் ஆடுகளைத் திருடியதாக, விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.