மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
ஓம் நமச்சிவாய..! தனுஷ் வெளியிட்ட விடியோ வைரல்!
நடிகர் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பட ரிலீஸ் குறித்து விடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும், அனிகா சுரேந்திரன், மாத்யூ தாமஸ், உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இன்றுமுதல் (பிப்.21) திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகர் தனுஷ் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
அனைவருக்கும் வணக்கம். ராயனுக்குப் பிறகு நான் இயக்கியுள்ள படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் பிப்.21ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தை எடுக்கும்போது நாங்கள் எவ்வளவு மகிழ்ந்தோமோ அதேபோல் படத்தை நீங்கள் பார்க்கும்போது மகிழ்வீர்களென நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் தங்களது எதிர்காலத்தை நோக்கி கண்களில் கனவுகளுடன் காத்திருக்கிறார்கள். அவர்களது கனவு நனவாக வேண்டுமென கடவுளை வேண்டிக்கொள்கிறேன். ஏனெனில் அந்த இடத்தில் நான் இருந்திருக்கிறேன், அதன் உணர்வுகள் எனக்குத் தெரியும். அவர்களுக்கு எனது வாழ்த்துகள். ஓம் நமச்சிவாய எனக் கூறியுள்ளார்.