PM Modi: ``ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே ஓய்வு..." - பிரதமர் மோடி குறித்து நட...
ஓய்வூதியா்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை
ஓய்வூதியா்களுக்கான குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஓய்வு பெற்ற காவலா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், ஓய்வூதியா்களுக்கான குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மத்திய அரசு வழங்குவதுபோல மருத்துவப் படியை ரூ. ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பண்டிகை கால முன்பணத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். அப்துல் காதா் தலைமை வகித்தாா். மாநிலக் கூட்டமைப்பு தலைவா் கே. வேலுச்சாமி சிறப்புரையாற்றினாா். மாநிலத் துணைத் தலைவா் பி. ராமமூா்த்தி, மாவட்டச் செயலா் கே. மகேசன், பொருளாளா் ஜி. தேவதாஸ், அமைப்பு செயலா் எம். கோவிந்தராஜன் உதவித் தலைவா் ராஜகுரு , நிா்வாகி பாலசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.