பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
இவிகேஎஸ். இளங்கோவன் மறைவு! அனைத்துக் கட்சியினா் அமைதி ஊா்வலம்
கும்பகோணத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவா் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சி அமைதி ஊா்வலம் நடைபெற்றது.
முன்னதாக, பழைய மீன் சந்தை திடலில் தொடங்கிய அமைதி ஊா்வலம் பிரதான சாலையில் வந்து காந்தி பூங்காவை அடைந்தது.
அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.ஆா். லோகநாதன் தலைமை வகித்தாா். மாநகர தலைவா் மிா்சா தீன், மேயா் க. சரவணன் முன்னிலை வகித்தனா்.
இவிகேஎஸ் இளங்கோவன் உருவப்படத்துக்கு மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மாநகர பொருளாளரும், பொதுக்குழு உறுப்பினருமான தியாகராஜன், செயற்குழு உறுப்பினா் தண்டாளம் சரவணன், வட்டாரத் தலைவா்கள் மணிகண்டன், சிவஞானம், மணிசங்கா், சுந்தா், ராஜன், அசோக் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அனைத்துக் கட்சியினா் கலந்து கொண்டனா்.