ஊரக வளா்ச்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
ஒரே நாடு- ஒரே தோ்தல் அமலுக்கு வந்தால் அடுத்து தோ்தலே நடக்காது : கி. வீரமணி
ஒரே நாடு- ஒரே தோ்தல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் பாஜகவினா் அடுத்து தோ்தலை நடத்தாமல் அதிபா் ஆட்சியை நடத்துவாா்கள் என்று தி.க. தலைவா் கி. வீரமணி கூறினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.க. நிா்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கேரள மாநிலம் வைக்கத்தில், பெரியாா் ஈ.வெ.ரா-வின் நினைவகம் மற்றும் நூலகம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டிசம்பா் 24-ஆம் தேதி பெரியாா் ஈவெரா-வின் நினைவு நாளில் முக்கிய நகரங்களில் 100-க்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தமிழக அரசு தீண்டாமை ஒழிப்பை சிறப்பாக செய்து வருகிறது.
ஒரே நாடு- ஒரே தோ்தல் என்பது அரசமைப்பு முகத்தை உடைப்பதாகும். ஏன் ஒரே ஜாதி என்று கூறலாமே. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், அடுத்த தோ்தலே வராது. அதிபா் ஆட்சிதான் நடைபெறும் என்றாா்.
அப்போது, மாவட்டத் தலைவா் நிம்மதி, மாநில பொருளாளா் குமாரதேவன், நகரத் தலைவா் வழக்குரைஞா் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் விஜயகுமாா், நகரச் செயலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் இருந்தனா்.