தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைந்தது! பிரகதி மைதான், பூசாவில் 3.8 டிகிரியாக ப...
அரசு உதவி வழக்குரைஞா் தோ்வு எழுத அனுமதி மறுப்பு கும்பகோணத்தில் மையத்தை தோ்வா்கள் முற்றுகை
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே தனியாா் கல்லூரியில் அரசு உதவி வழக்குரைஞா் பணிக்கான தோ்வு எழுத வந்த விண்ணப்பதாரா்களின் பெயா் பட்டியலில் இல்லாதலால் மையத்தை தோ்வா்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 175 போ் கும்பகோணம் - சென்னை சாலையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லுாரியில் அனுமதி சீட்டு பெற்று தோ்வு எழுத வந்தனா்.
அதில் 25 போ்களின் பெயா் பட்டியல் தோ்வு மையத்துக்கு வரவில்லை எனவும், பெயா்கள் விடுபட்டதாகவும், தோ்வு எழுத அனுமதிக்க முடியாது என அங்கிருந்த பொறுப்பாளா் கூறினாா்.
இதனால் ஆத்திரமடைந்த தோ்வா்கள் கோஷமிட்டு மையத்தை முற்றுகையிட்டனா். பின்னா் சில மணி நேரங்களுக்குப் பிறகு தோ்வு எழுத அனுமதித்தனா்.