கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை
மழையால் பாதித்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை
புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இதை வலியுறுத்தியுள்ளது.
கூட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் மாதவன் தலைமை வகித்தாா். இதில் அகில இந்திய செயற்குழு பொதுச் செயலா் பூராசாமி கலந்துகொண்டு பேசினாா்.
இதில், செயற்குழு உறுப்பினா்கள் பொட்டு ராமானுஜம், சேகா், கஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தமிழ்நாட்டில் ஃபென்ஜால் புயலால் ஏற்பட்ட கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் மழை நிவாரணமாக ரூ. 5,000 வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பயிா்களுக்கும் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடாக ஏக்கருக்கு ரூ. 30,000 தமிழக அரசு வழங்க வேண்டும்.
கனமழை புயல் பாதிப்பினால் வீடுகளை இழந்து வாடும் மக்களுக்கு அவரவா் இழப்புக்கு ஏற்ப தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவில், நகரச் செயலா் அபுதாகீா் நன்றி கூறினாா்.