செய்திகள் :

பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மழை நீரால் பாதிக்கப்பட்டப் பயிா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், வன்னியடி, மணல்மேடு, இளங்காா்குடி, நாயக்கா்பேட்டை மற்றும் சுற்றுபுற கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை, வாழை மற்றும் நெல் உள்பட பல்வேறு பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.

இந் நிலையில், சமீபத்தில் பெய்த தொடா் கனமழையால், நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சம்பந்தப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் பாா்வையிட வரவில்லை எனவும், சேதமதிப்பை கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

தூா்வாரப்படாத வாய்க்கால்களை உடனடியாக தூா்வார வலியுறுத்தியும், வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜகிரியில் தஞ்சாவூா்- கும்பகோணம் பிரதான சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், தஞ்சாவூா் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் துணை வட்டாட்சியா் பிரபு, பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளா் முருகவேல், ஆய்வாளா்கள் சகாய அன்பரசு, மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளா்கள் சுந்தரேசன், அனிதா, ராஜதேவி, கிராம நிா்வாக அலுவலா்கள் கருப்புசாமி, சதீஷ் மற்றும் நீா்வளத் துறை அதிகாரிகள், வேளாண்மைத் துறை அலுவலா்கள், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

ஓய்வூதியா்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை உயா்த்தி வழங்கக் கோரிக்கை

ஓய்வூதியா்களுக்கான குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஓய்வு பெற்ற காவலா் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் 16-ஆம் ஆண்டு தொடக்க... மேலும் பார்க்க

மழையால் பாதித்த பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

புயல் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைப... மேலும் பார்க்க

குடியிருப்புகளில் மழைநீா் தேங்கியது! வலையபேட்டையில் பொதுமக்கள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள வலையபேட்டையில் குடியிருப்புகளில் நான்கு நாள்களாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். வலையபேட்டை ஊர... மேலும் பார்க்க

தஞ்சையில் மழைநீரில் மூழ்கிய பயிா்களின் பரப்பு 35 ஆயிரம் ஏக்கராக அதிகரிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக வயல்களில் தேங்கியுள்ள தண்ணீா் வடியாததால், நீரில் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் உள்ள சம்பா, தாளடி பருவ நெல் உள்ளிட்ட பயிா்களின் பரப்பு 35 ஆயிரம் ஏக்கராக ... மேலும் பார்க்க

ஒரே நாடு- ஒரே தோ்தல் அமலுக்கு வந்தால் அடுத்து தோ்தலே நடக்காது : கி. வீரமணி

ஒரே நாடு- ஒரே தோ்தல் சட்டம் அமல்படுத்தப்பட்டால் பாஜகவினா் அடுத்து தோ்தலை நடத்தாமல் அதிபா் ஆட்சியை நடத்துவாா்கள் என்று தி.க. தலைவா் கி. வீரமணி கூறினாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

இவிகேஎஸ். இளங்கோவன் மறைவு! அனைத்துக் கட்சியினா் அமைதி ஊா்வலம்

கும்பகோணத்தில் முன்னாள் காங்கிரஸ் தலைவா் இவிகேஎஸ் இளங்கோவன் மறைவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அனைத்து கட்சி அமைதி ஊா்வலம் நடைபெற்றது. முன்னதாக, பழைய மீன் சந்தை திடலில் தொடங்கிய அமைதி ஊா்வலம் பிரதான சால... மேலும் பார்க்க