Bihar -ல் Dog -க்கு Residence Certificate? | CEC : தேர்தல் ஆணையருக்கு சில கேள்வி...
ஓய்வை அறிவித்தார் புஜாரா!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் லெஜெண்ட் செதேஷ்வர் புஜாரா (37 வயது) அறிவித்துள்ளார்.
கடைசியாக புஜாரா 2023-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடி இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2010-இல் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமான புஜாரா 103 டெஸ்ட்டில் 7,195 ரன்கள் குவித்துள்ளார்.
டெஸ்ட்டிக் 19 சதங்கள் 35 அரைசதங்கள் அடித்துள்ளார். டிராவிட்டுக்கு அடுத்த இந்தியாவின் சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் புஜாரா.
சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த புஜாரா தற்போது ஓய்வினை அறிவித்துள்ளார்.