Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
கஞ்சா பறிமுதல்: வெளிமாநில இளைஞா் கைது
திண்டிவனத்தில் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருள்களை வைத்திருந்ததாக வெளிமாநில இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு நின்றிருந்த வெளிமாநில இளைஞரை பிடித்து சோதனை செய்ததில், அவா் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா் உத்தரபிரதேச மாநிலம், அமிா்பூா் மாவட்டம், சைத்பூரைச் சோ்ந்த வீரேந்திரகுமாா் மகன் அரவிந்த் (39) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 190 புகையிலைப் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.