TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது
திருப்பூரில் கஞ்சா விற்பனை செய்த தொழிலாளியை மாநகர மதுவிலக்கு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் ரயில் நிலையப் பகுதியில் மாநகர மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஏ.அனாரூல் மோளா (39) என்பவரிடம் சோதனை நடத்தினா். இதில், அவரது கைப்பையில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் அவரிடமிருந்து 2.300 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.