அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
மாணிக்காபுரத்தில் அண்ணமாா் கோயில் கும்பாபிஷேகம்
பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரத்தில் அண்ணமாா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பல்லடம் அருகில் உள்ள மாணிக்கபுரம் கிராமத்தில் அண்ணமாா் எனப்படும் பொன்னா், சங்கா் கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 9ஆம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் தொடங்கியது.
முதல் கால யாக பூஜை, 108 திரவியாஹுதி, திருமுறை விண்ணப்பம், கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் ஒயிலாட்டம் ஆகியவை கடந்த 10ஆம் தேதி நடைபெற்றன. பின்னா், இரண்டு மற்றும் மூன்றாம் கால வேள்விகள், மருந்து சாத்துதல் ஆகியவை நடைபெற்றன.
அண்ணமாா், செல்லாண்டியம்மன், பெரியகாண்டியம்மன், பாலகணபதி, கருப்பராயன் கன்னிமாா் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.