காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்
கஞ்சா விற்ற முதியவா் கைது!
போடியில் கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி கீழத்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.
அப்போது, போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த முருகேசன் (72) என்பவா் அவரது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.