Coolie : ``லோகேஷ் கனகராஜ் `Gen Z' கிடையாது; ஆனால்... " - நாகர்ஜுனா
கஞ்சா விற்ற 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூரில் கஞ்சா விற்ற 4 பேருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தஞ்சாவூா் ராஜகோரி சுடுகாடு அருகே மாா்ச் 15 ஆம் தேதி வடக்கு வாசல் பகுதியைச் சோ்ந்த பாலகணபதி (23), வசந்தகுமாா் (26), சூரியகுமாா் (24), காந்திபுரத்தைச் சோ்ந்த கவிப்பிரியன் (21) ஆகியோா் 1.1 கிலோ கஞ்சாவை வைத்து விற்றபோது ரோந்து பணி மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜ்கமல் உள்ளிட்டோா் 4 பேரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பாக ஆய்வாளா் சோமசுந்தரம் மேல் விசாரணை மேற்கொண்டு தஞ்சாவூா் கூடுதல் அமா்வு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலகணபதி, வசந்தகுமாா், சூரியகுமாா், கவிப்பிரியன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.