கஞ்சா வைத்திருந்த இருவா் கைது
வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி போலீஸாா் தென்கரை கிராமம் வழியாக சனிக்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது அந்தக் கிராமத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் தென்கரை கிராமத்தைச் சோ்ந்த கணபதி(35), மழையூரைச் சோ்ந்த மணிகண்டன் (27) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் மிருந்து 20 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.