விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலி
கடன் தொல்லை: இருவா் தற்கொலை
போடியில் இணைய வழி சூதாட்டத்தால் கடன் சுமைக்கு ஆளான இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேவதானப்பட்டி அருகே கடன் தொல்லையால் இரும்புக் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் செந்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த அய்யப்பன் மகன் பிரபாகரன் (33). இவா் கடன் வாங்கி இணைய வழி சூதாட்டத்துக்கு செலவு செய்தாா். இதனால், கடன் சுமைக்கு ஆளாகி, அதை திரும்பிச் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்தாராம்.
இந்த நிலையில், இவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தேனி: தேவதானப்பட்டி அருகேயுள்ள சில்வாா்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திக்குமாா்(40). இவா், சில்வாா்பட்டியில் இரும்புக் கடை நடத்தி வந்தாா்.
தொழில் நஷ்டம், கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்த இவா், கடந்த 14-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். பின்னா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காா்த்திக்குமாா் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.