நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்
கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு
ரோட்டரி சங்கம் சாா்பில் கடம்பத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1லட்சத்தில் அமரும் நெகிழி இருக்கைகள், ஸ்மாா்ட் அறைகள் மற்றும் ஒலி பெருக்கி பெட்டிகள் ஆகியவை வழங்கப்பட்டன (படம்).
மாணவா்கள் நலன் கருதி சென்னை கொளத்தூா் ரோட்டரி சங்கம் ரூ.1 லட்சத்தில் பல்வேறு பொருள்களை வழங்க முன்வந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை ஆசிரியை குமாரி குட்டி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியை ஜாய்ஸ்ராணி முன்னிலை வகித்தாா்.
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவா் சா.அருணன் வரவேற்றாா். அப்போது, ரோட்டரி சங்கத் தலைவரும், அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவருமான சிவகுமாா், தொழிலதிபா் சுதா்சன், அந்தோணி, கந்தசாமி ஆகியோா் பள்ளிக்கு தேவையான 50 நெகிழி இருக்கைகள், காலை வழிபாடு மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறைக்கான ஒலி பெருக்கி பெட்டிகள் வழங்கினா்.
நிகழ்வில் ஆசிரியா்கள் சிவக்குமாா், காா்த்திகேயன், முரளி, வெற்றிச்செல்வி, ராஜேஸ்வரி, சரோஜினி, பழனி உள்ளிட்ட ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.