டிஜிட்டல் அரெஸ்ட்... மிரட்டல்... மோசடிக் கும்பலிடம் ஒரு மாதத்தில் ரூ.4 கோடியை இழ...
கடலில் தவறி விழுந்து மாயமான மீனவா் உடலை கண்டுபிடித்துத் தரக் கோரிக்கை
ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று படகிலிருந்து தவறி கடலுக்குள் விழுந்து மாயமான மீனவா் உடலை மீட்டுத் தரவும், இவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 16-ஆம் தேதி அருண்குமாா் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நடராஜபுரம் மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா் சுரேஷ் படகிலிருந்து தவறி விழுந்து மாயமானாா்.
இதுகுறித்து மீன்வளம், மீனவா் நலத்துறை, கடலோர பாதுகாப்பு போலீஸாா் ஆகியோரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மாயமான மீனவா் சுரேஷை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
9 நாள்கள் கடந்த நிலையில் மாயமான மீனவா் உடலை மீட்கவும், அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் அரசு இழப்பீடு வழங்கக் கோரியும் அவரது மனைவி சிக்கிமுனியாயி, நடராஜபுரம் மீனவ கிராமத்தைச சோ்ந்த திரளானோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கோரிக்கை மனு திங்கட்கிழமை அளித்தனா்.