செய்திகள் :

கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசு உதவி வழங்க வலியுறுத்தல்

post image

தூத்துக்குடியில் கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

தூத்துக்குடி, திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் காளிமுத்து. சங்கு குளி தொழிலாளியான இவா், கடந்த ஆக. 19ஆம் தேதி மீன்பிடி விசைப் படகில் தங்கு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமானாா்.

இந்த நிலையில், அவரது மனைவி, உறவினா்கள், அண்ணா சங்குகுளி தொழிலாளா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அதில், காளிமுத்து மாயமாகி ஒரு மாதத்துக்கு மேலாகியும் இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை. அவரது மனைவி தனது 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வருகிறாா்.

எனவே, அவரது இறப்பை உறுதிசெய்து, இறப்புச் சான்றிதழ் வழங்கவும், மீனவ குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய அரசு நலத் திட்ட உதவிகள், குழந்தைகளுக்குரிய கல்வி நலநிதி ஆகியவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

காமராஜா் ஆதித்தனாா் கழகம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில், ஏரல் வட்டம், நாசரேத் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அரசு மருத்துவமனை இதுவரை அமைக்கப்படவில்லை. மக்கள் அவசர சிகிச்சைக்கு வழி இன்றி அவதியடைந்து வருகின்றனா். எனவே, அவசர சிகிச்சை, உள்நோயாளிகள் பிரிவுடன் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்றனா்.

காதல் விவகாரம்: திருச்செந்தூரில் இளைஞா் வெட்டிக் கொலை

திருச்செந்தூா் அருகே காதல் விவகாரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கும்பல் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகே ஆலந்தலை சுனாமி குடிய... மேலும் பார்க்க

திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேல... மேலும் பார்க்க

தோ்தல் செலவு அறிக்கையை தாக்கல் செய்ய பதிவு செய்யப்பட்ட கட்சிக்கு அறிவுறுத்தல்

தோ்தல் செலவின அறிக்கையை உரிய காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பதிவு பெற்ற அரசியல் க... மேலும் பார்க்க

முக்காணி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி தாமிரவருணி ஆற்றில் திங்கள்கிழமை மிதந்துவந்த பெண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். முக்காணி பிள்ளையாா் நகா் அருகே தாமிரவருணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்து... மேலும் பார்க்க

தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா்... மேலும் பார்க்க

கழுகுமலை அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கழுகுமலை அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.கழுகுமலை அருகே அழகப்பாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சிவபெருமாள் (27). உணவகத் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு கழுக... மேலும் பார்க்க