ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
தசரா குழு செயலருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு
சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே தசரா குழு செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
தட்டாா்மடம் அருகே பள்ளக்குறிச்சி ராமசாமிபுரத்தைச் சோ்ந்த தமிழ்வீரன் (55) என்பவா், பத்திரகாளி அம்மன் தசரா குழு அமைத்து 40 ஆண்டுகளாக நடத்திவருவதுடன், அதன் செயலராக உள்ளாா்.
குலசேகரன்பட்டினம் கோயில் தசரா திருவிழாவையொட்டி, அவா் தனது ஊரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப். 19) குடில் அமைக்க ஏற்பாடு செய்தாா். அதே ஊரைச் சோ்ந்த பிரபு, வரதன், கதிா், செந்தில் ஆகிய 4 பேரும் முன்விரோதம் காரணமாக, குடில் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனராம்.
மேலும், அவரைத் தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்ததுடன், குடில் அமைக்க வைத்திருந்த சிமென்ட் தூண்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்திச் சென்றனராம். புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் ஜெயபால் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, 4 பேரையும் தேடிவருகிறாா்.