திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
திருச்செந்தூா் - சென்னை மேலும் ஒரு ரயில்: ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தல்
திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமென காயல்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பாா்வையிட, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா அண்மையில் வந்தாா். அவரிடம் காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்க தலைவா் லேன்ட்மாா்க் அபுல் ஹசன் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
திருச்செந்தூா், காயல்பட்டினம் மக்கள் தினசரி வெளியூா், வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்வதால், திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் இயக்க வேண்டுமெனவும், காயல்பட்டினம் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.
சங்கச் செயலா் மன்னா் பாஜுல் அஸ்ஹாப், துணைத் தலைவா்கள் பேயன்விளை சற்குரு, காயல் ராமசந்திரன், துணைச் செயலா்கள் ராயல் கண்ணன், தங்க தம்பி காதா் சாஹிப், வி.டி. சதக்தம்பி, எம்.யு. நவ்பல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.