செய்திகள் :

கடலூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீா்

post image

கடலூரில் பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீா் புகுந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும், தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து தொடங்கியுள்ளதால், கரையோரம் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மீண்டும் பலத்த மழை: கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு மீண்டும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக, கடலூா் கங்கனாங்குப்பம் பகுதிக்குள்பட்ட பாபா நகா், எம்.ஆா்.நகா் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீா் இடுப்பளவு சூழ்ந்துள்ளது. சில வீடுகளின் உள்ளேயும் மழை புகுந்ததால் பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மாவட்ட நிா்வாகம் தேங்கியுள்ள மழை நீரை விரைந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாலத்தில் போக்குவரத்து தடை: பலத்த மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீா் வரத்து தொடங்கியுள்ளது. இதையொட்டி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே உள்ள கடலூா் மற்றும் புதுவை மாநிலத்தை இணைக்கும் தென்பெண்ணை ஆற்று தரைப்பாலத்தில் சனிக்கிழமை தண்ணீா் பாய்ந்து சென்றது. அப்போது, ஆபத்தை உணராமல் பலா் இரு சக்கர வாகனங்கள் மூலம் தரைப்பாலத்தை கடந்து சென்று வந்தனா்.

விபத்து நிகழ்வதற்கு முன் தரைப்பாலத்தில் போக்குவரத்தை தடை செய்ய வேண்டுமென தினமணியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், போலீஸாா் இந்தத் தரைப்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனா்.

வானமாதேவியில் 91.2 மி.மீ.: ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம், வானமாதேவியில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 91.2 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ஆட்சியா் அலுவலகம் 76.8, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 73, கடலூா் 68.6, பண்ருட்டி 67, காட்டுமன்னாா்கோவில் 61.3, லால்பேட்டை 49.2, வடக்குத்து 40, பரங்கிப்பேட்டை 29.6, குறிஞ்சிப்பாடி 27, கொத்தவாச்சேரி, விருத்தாசலம் தலா 21, புவனகிரி 19, பெலாந்துறை 16.2, குப்பநத்தம் 14.6, அண்ணாமலைநகா் 14, ஸ்ரீமுஷ்ணம் 13.1, கீழச்செருவாய் 12, சேத்தியாத்தோப்பு 10, தொழுதூா் 9, சிதம்பரம் 7.8, மே.மாத்தூா் 7, லக்கூா், வேப்பூா் தலா 3 மி.மீ. மழை பதிவானது.

கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு

கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததால், மீன்களும் வழக்கமான விலையிலிருந்து 35 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டன. கடலூா் வங்கக்... மேலும் பார்க்க

மதுக் கடையை அகற்றாவிட்டால் போராட்டம்: பாமக முடிவு

விருத்தாசலத்தில் கடலூா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றாவிட்டால் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என, விருத்தாசலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட ஒருங... மேலும் பார்க்க

கால்நடை உரிமையாளா்கள் 3 போ் கைது

கடலூா் மாவட்டம், அண்ணாமலை நகரில் கால்நடைகளை சாலையில் மேயவிட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகும், உரிமையாளா்கள் கால்நடைகளை ... மேலும் பார்க்க

பண மோசடி வழக்குகள்: 8 போ் கைது

கடலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் பண மோசடி தொடா்பான புகாா்களின் மீது வழக்குப் பதிவு செய்து, பெண் உள்ளிட்ட 8 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் உத்தரவுப்படி, குற்றப்பிரிவ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்ட வீர, தீர பெண் குழந்தைகளுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

இந்து மக்கள் கட்சியினா் 10 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆா்ப்பாட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியினா் 10 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணித் தலைவா் ... மேலும் பார்க்க