செய்திகள் :

கடலூர்: ``பெண் என்பதால் புறக்கணிக்கிறீர்களா..?” - மாநகராட்சி அதிகாரிகளிடம் வெடித்த மேயர் சுந்தரி

post image

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி செலவில் வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேற்று மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச் செல்வன் உள்ளிட்டவர்கள் அங்குச் சென்றனர். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரத்தை கடந்தும், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வரவில்லை.

கடலூர் மாநகராட்சி

அதில் கடுப்பான மேயர் சுந்தரி, ``அடிக்கல் நாட்டு விழா என்று அதிகாரிகள் கூறியதால்தான் இங்கு வந்தேன். ஆனால் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அதிகாரிகள் வருவது கிடையாது. நான் செல்போனில் அழைத்தாலும் எந்த அதிகாரிகளும் எடுப்பதில்லை. எத்தனையோ முறை என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள். நானும் போனால் போகிறதென்று பிரச்னை எதுவும் செய்யாமல் சென்று கொண்டிருக்கிறேன். இத்துடன் அதிகாரிகள் வராமல் இருக்கும் நான்காவது நிகழ்ச்சி இது.

தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அசிங்கத்தைப் பொறுத்துக்கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்கிறேன்” என்று செய்தியாளர்கள் மற்றும் துணை மேயர் உள்ளிட்ட கட்சிக்காரர்களிடம் கூறி நொந்து கொண்டார்.

கடலூர் மேயர் சுந்தரி

அதையடுத்து சிறிது நேரத்தில் மாநகராட்சி அலுவலர்கள் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்களிடம், ``மாநகராட்சி திட்டப் பணிகளை துவக்கி வைக்க வேண்டும் என்று நீங்கள்தான் நேரம் குறிப்பிட்டு என்னை வரச் சொன்னீர்கள். ஆனால் நீங்கள் யாரும் வரவில்லை. கடந்த நான்கைந்து நிகழ்ச்சிகளாக தொடர்ந்து நீங்கள் இப்படித்தான் செய்கிறீர்கள். நான் பெண் மேயர் என்பதால் என் நிகழ்ச்சிகளை இப்படி புறக்கணிக்கிறீர்களா? வேலை ஆரம்பித்த பிறகு வந்து பார்ப்பீர்களா? அதன்பிறகு அது தப்பு இது தப்பு என்று சொல்வீர்களா?” என்று கடுகடுத்தார் மேயர் சுந்தரி. அதையடுத்து வணிக வளாகப் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் மேயர்.

அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், கடலூர் தி.மு.க நகரச் செயலாளருமான பழக்கடை ராஜாவின் மனைவிதான் மேயர் சுந்தரி. அவரே மாநகராட்சி அதிகாரிகள் மீது பகிரங்க குற்றச்சாட்டு வைத்திருப்பது ஆளும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kharge: மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்ட கார்கே.. விரக்தியில் போட்ட பதிவு!

'தேசிய கல்வி கொள்கை' - தற்போதைய மக்களவை, மாநிலங்களவையின் ஹாட் டாப்பிக். கடந்த திங்கட்கிழமையில் இருந்து நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. தேசிய கல்வி கொள்கை திட்டம், இந்தி திணிப்பு எதிர்ப்ப... மேலும் பார்க்க

Kerala CM: கவர்னருடன் டெல்லி சென்று கேரளாவுக்கு நிதி கேட்ட பினராயி விஜயன்... வியக்க வைத்த நிகழ்வு!

கேரள முதல்வர் - கவர்னர் நட்பு: கேரள கவர்னராக இருந்த ஆரிப் முஹம்மதுகான் முதல்வர் பினராயி விஜயனுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் 5 ஆண்டுகளாக கவர்னராக இருந்த நிலையில் பஞ்சாப் கவர்னராக நியமிக... மேலும் பார்க்க

NEP: ``உண்மைகளைத் திரிப்பதை நிறுத்துங்கள்'' - தர்மேந்திர பிரதானை சாடிய கனிமொழி

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக திமுகவிற்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானிற்கும் மோதல் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. நேற்று (மார்ச் 12) தர்மேந்திர பிரதான் பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு ஏற்றுக்கொண்டதாக த... மேலும் பார்க்க

Nilgiris: ``பலா மரங்களை தேடி வரும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம்..'' -வேதனையில் பழங்குடிகள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றாலும் மரங்களை வெட்டுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. குடியிருப்பு அல்லது சாலையில் விழும் நிலையில் ... மேலும் பார்க்க

Pakistan: ரயிலைக் கடத்திய பலூச்சிகள் யார்? அவர்களுக்கு இருக்கும் திராவிட தொடர்பு என்ன?

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலூச் விடுதலை படை (BLA) என்ற தீவிரவாத அமைப்பு நேற்று சிறைபிடித்தது. ரயில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில், அதில் பயணம் செய்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளது. 500... மேலும் பார்க்க

Health: பேரு தான் சின்ன வெங்காயம்... பலன்கள் அப்பப்பா..!

தினமும் சாப்பிடவேண்டிய காய்கறிகளில் சின்ன வெங்காயத்துக்குத்தான் முதல் இடம். ஆனால், உரிக்க சோம்பல்பட்டு பலரும் பெரிய வெங்காயத்தையே நாடுகின்றனர். உணவில் ருசியைக் கூட்டி, வாசனையைச் சேர்க்கும் சின்ன வெங்க... மேலும் பார்க்க