செய்திகள் :

கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடையலாம்: வி. நாராயணன்

post image

கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் என இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி. நாராயணன் தெரிவித்தார்.

இஸ்ரோவின் 11-ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இவர் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 14) பொறுப்பேற்கவுள்ளார்.

இதனிடையே கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு பதியில் வி. நாராயணன், தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரகளுடன் அவர் பேசியதாவது,

இஸ்ரோ தலைவராக மிகவும் முக்கியமான பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் வழங்கிய இந்த வாய்ப்பை, நாட்டிற்கு சேவை செய்ய வழங்கப்பட்ட வாய்ப்பாகவே கருதுகிறேன்.

இம்மாதம் ஒரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. 30 ஆயிரம் கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் படைத்த ராக்கெட் தயாரிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விண்ணில் அனுப்பப்பட்டுள்ள இரு செயற்கைக்கோள்களின் தகவல் பரிமாற்றம் வெற்றிகரமாக நிகழ்ந்துள்ளது. இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் கட்டப்பட உள்ளது. அதற்காகவும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் இந்த டாக்கிங் தொழில்நுட்பம் பயன்பெறும்.

இந்தியா விண்வெளி ஆராய்ச்சியைத் தொடங்கியபோது அண்டை நாடுகளை நம்பியிருந்தது. தற்போது 432 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இஸ்ரோ ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

எந்தப் பள்ளியில் படித்தாலும் உயரிய பொறுப்புகளை அடைய முடியும். கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் எனக் குறிப்பிட்டார்.

கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர காவல் ஆணையர... மேலும் பார்க்க

பொங்கல் திருநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாக குடியரசுத் தலைவா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!

நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார். காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்; கணுப்... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: மூன்று நாள்களில் 1.47 கோடி போ் பெற்றனா்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை 3 நாள்களில் 1.47 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற்றனா். இந்தத் தகவலை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உழவா்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்க... மேலும் பார்க்க

போகி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றம்

போகி பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை ... மேலும் பார்க்க