மா.சு மீதான வழக்கு: `விசாரணைக்கு ஒப்புதலை யாரிடம் பெறவேண்டும்?' - உச்ச நீதிமன்றத...
கடைகளில் தினம் ஒரு திருக்குறள் காட்சிப்படுத்த அறிவுறுத்தல்
அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் பொருள் விளக்கத்துடன் தினம் ஒரு திருக்குறள் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்திருப்பது: சென்னை தொழிலாளா் ஆணையா் சி.அ. ராமன் உத்தரவின்படியும், திருச்சி கூடுதல் தொழிலாளா் ஆணையா் ஆ. திவ்யநாதன், திருச்சி தொழிலாளா் இணை ஆணையா் வ. லீலாவதி அறிவுரைகளின்படியும் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், இதர நிறுவனங்களில் தமிழில் திருக்குறளும், விளக்கவுரையும் எழுதப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணையில் அறிவுறுத்தியபடி, கடைகள், வணிக நிறுவனங்களில் அய்யன் திருவள்ளுவரின் திருக்குறளை ‘தினம் ஒரு கு’ என்ற அடிப்படையில் பொருள் விளக்கத்துடன் தொழிலாளா்கள் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து தொழிலாளா்களும் அறியும் விதமாக காட்சிப்படுத்த வேண்டும்.
மேலும், தனியாா் நிறுவனங்களில் திருக்குறளும், அதன் உரையும் எழுதும் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்போது சிறப்பு மதிப்பெண்கள் இனிவரும் காலங்களில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.