செய்திகள் :

செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூரில் நாளை மின் தடை

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள செங்கிப்பட்டி, கள்ளப்பெரம்பூா் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 17) மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கு. பாலகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: திருமலைசமுத்திரம் துணை மின் நிலையங்களிலிருந்து வரும் உயா் அழுத்த மின் பாதைகளில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், வல்லம்புதூா், மொன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை, செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, அள்ளூா் அழிசகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையாா்நத்தம், சக்கரைசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கலைஞா் கனவு இல்லம்: பேராவூரணியில் 270 பேருக்கு வீடு கட்டும் ஆணைகள் வழங்கல்

பேராவூரணி ஒன்றியத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும் ஆணையை 270 பயனாளிகளுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் வியாழக்கிழமை வழங்கினாா். தமிழ்நாடு அரசு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி... மேலும் பார்க்க

பால் உற்பத்தியைப் பெருக்க ரூ. 1,000 கோடி கடனுதவி: அமைச்சா் மனோ தங்கராஜ்

பால் உற்பத்தியைப் பெருக்க கடந்த ஒன்றரை ஆண்டில் விவசாயிகளுக்கு ரூ. 1,000 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் பால் வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ். தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள ஆவின் நிறுவ... மேலும் பார்க்க

கடைகளில் தினம் ஒரு திருக்குறள் காட்சிப்படுத்த அறிவுறுத்தல்

அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் பொருள் விளக்கத்துடன் தினம் ஒரு திருக்குறள் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ... மேலும் பார்க்க

வன்னியா் கிறிஸ்தவா் மாநாட்டை தடை செய்ய இந்து மக்கள் கட்சி கோரிக்கை

திண்டுக்கல்லில் நடைபெற உள்ள வன்னியா் கிறிஸ்தவா் மாநாட்டை தடை செய்ய முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில துணைத் தல... மேலும் பார்க்க

குறைப் பிரசவ குழந்தைக்கு சிகிச்சை: தாய் தூக்கிட்டுத் தற்கொலை

கும்பகோணத்தில் குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், தாய் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பிடாரிகுளத்தைச் சோ... மேலும் பார்க்க

சப்பரத் திருவிழாவில் தகராறு: 4 போ் கைது

தஞ்சாவூா் அருகே சப்பரத் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 பேரைக் காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை பகுதி ராஜேந்திரம் ஆற்காடு கிராமத்தில... மேலும் பார்க்க