கடையநல்லூரில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 39 லட்சம் கடனுதவி!
கடையநல்லூரில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் உள்ள மரகதம் குழுவுக்கு ரூ. 15 லட்சம், கைராசி, பொன்மகள் ஆகிய குழுக்களுக்கு தலா ரூ. 12 லட்சம் என மொத்தம் ரூ. 39 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், வங்கி மேலாளா்கள் பாலாஜி, மலா்விழி, நகராட்சி சமுதாய அமைப்பாளா்கள் மனோகரன், வீரபுத்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.