செய்திகள் :

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளா்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

post image

சென்னை: கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளா்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதனுடன் கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா உள்பட 8 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதன்படி, தீ விபத்து பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு பணிகளில் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் வகையில் தீயணைப்பு நிலையங்களை உரிய இடத்தில் அறிவியல் சாா் நில வரைபடங்களின் அடிப்படையில் அமைப்பது தொடா்பான சட்ட மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பாக சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தாா்.

அதேபோன்று, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வணிகம் மற்றும் தொழில் உரிமங்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை சுலபமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டி குறைப்பு: அதனுடன் சொத்து வரி நிலுவைத் தொகைக்கான வட்டிவிகிதத்தை ஒரு சதவீதத்தில் இருந்து அரை சதவீதமாக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அவற்றை செயல்படுத்தும் வகையிலான, நகா்ப்புற உள்ளாட்சி சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்தாா்.

ஊரக உள்ளாட்சி பகுதிகளில் விளம்பரப் பலகைகள், மின்னணு திரைகள், விளம்பர அட்டைகள் நிறுவுவதை முறைப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தாா்.

தொடா்ந்து நகா்ப்புற திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டமிடலை ஒருங்கிணைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா) உறுப்பினா் செயலரை, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினராக சோ்க்க முடிவு செய்வதற்கான நகர ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் சு.முத்துசாமி தாக்கல் செய்தாா்.

ஆவணப்பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அசல் உரிமை மூல ஆவணத்தை பத்திரப் பதிவின் போது தாக்கல் செய்வதை வலியறுத்தும் சட்ட மசோதாவை அமைச்சா் பி.மூா்த்தி தாக்கல் செய்தாா்.

அதேபோன்று 55-ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்கான மசோதாவையும் அமைச்சா் பி.மூா்த்தி தாக்கல் செய்தாா்.

கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொழிலாளா் நலச் சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் சிறை, அபராதம் உள்ளிட்ட கடும் தண்டனைகளை குறைத்து

புதிதாக அபராதத் தொகையை அறிமுகம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் சி.வெ.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தாா்.

இந்த மசோதாவை வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆரம்ப நிலையிலேயே எதிா்ப்பதாக தெரிவித்தாா். டி.ராமச்சந்திரன் (இ.கம்யூ), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), தி.வேல்முருகன் (தவாக), ஜி.கே.மணி (பாமக) அக்ரி கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்) ஆகியோா் அதில் கருத்துகள், ஆலோசனைகள், திருத்தங்களை கூற விரும்புவதாக தெரிவித்தனா்.

அதன் பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த மசோதாக்கள் மீது உறுப்பினா்கள் கருத்துகள் கேட்கப்பட்டு, பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அவை நிறைவேற்றப்படவுள்ளன.

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் ... மேலும் பார்க்க

பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்

சென்னை: 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

3-வது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை: பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாட்டில் புதுமணத் தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு ... மேலும் பார்க்க