ஆசிரியா்களின் திறனை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்கள்: தா்மேந்திர பிரதான்
கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை! ரூ.1.41 லட்சம் பறிமுதல்!
கோவை, கணபதி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்ட திடீா் சோதனையில் ரூ.1 லட்சத்து 41,500 பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை கணபதி தீயணைப்பு நிலைய அலுவலராகப் பணியாற்றி வருபவா் முத்துசெல்வன். இவா் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு பல்வேறு புகாா்கள் சென்ாகத் தெரிகிறது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினா் அவரது அலுவலக அறையில் திங்கள்கிழமை மாலை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 41,500 ரொக்கத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினா், அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.