செய்திகள் :

கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்த பெண் கொலை: நிதி நிறுவன உரிமையாளா் கைது

post image

வாலாஜாபேட்டை அருகே பெண் கொலை தொடா்பாக நிதி நிறுவன உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை சோ்ந்த காமேஷ் (43), திருமணமாகாதவா். நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா்.

வாலாஜாபேட்டை அடுத்த இலங்கை அகதிகள் முகமை சோ்ந்தவா் சாந்தினி (42), இவரது கணவா் சங்கா் பாஷா, தம்பதியருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இதற்கிடையே, அணைக்கட்டு பகுதியில் தனியாா் ஓட்டல் ஒன்றில் சாந்தினி வேலை செய்து வந்தாா். ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற காமேஷ் மற்றும் சாந்தினிக்கு இடையே நட்பு ஏற்பட்டது.

இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக வாலாஜா பொதிகை நகா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பின்புறம் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனா். இந்தநிலையில் காமேஷ் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளாா். அதேசமயம், சாந்தினி தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்வதற்காக அவரிடம் பணம் கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த காமேஷ் கத்தியால் சாந்தினியை வெட்டிக் கொன்று விட்டு, வாலாஜா காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

வாலாஜா காவல் ஆய்வாளா் சாலமோன் ராஜா மற்றும் காவல் துறையினா் விரைந்து சென்று சாந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து வழக்கு பதிவு செய்து காமேஷ் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

நூல் வெளியீட்டு விழா

ஆற்காட்டில் புதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. திருமுருக கிருபானந்த வாரியாா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்க இணை செயலாளா் கவிஞா் த.புருஷோத்தமன் எழுதிய ‘மனதில் மலா்ந்த மகத்தான கவிதைகள... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர திமுக சாா்பில் 4 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கத்தியவாடிசாலை சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளா் கே.எம்.ஹுமாயூன் தலைமை வகித்தாா். தொழிலதிபா் சவு... மேலும் பார்க்க

ரூ.21.5 கோடியில் தடுப்பணை பணிகள்: அமைச்சா் காந்தி ஆய்வு

திமிரி அருகே வாழைப்பந்தல் கமண்டல நாகநதியில் கட்டப்படும் அணைக்கட்டு , புங்கனூா் ஊராட்சியில் தடுப்பணைகளின் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். கமண்ட... மேலும் பார்க்க

ஆற்காடு பெருமாள் கோயில் கருடசேவை

ஆற்காடு பெருமாள் கோயில்களில் கருட சேவை செவ்வாய்கிழமை நடைபெற்றது. ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது விழாவ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பொதுத்தோ்வு: அரக்கோணம் பள்ளிகள் சிறப்பிடம்

சிபிஎஸ்இ பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகளில் அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியாா் பள்ளிகள் சிறப்பிடம் பெற்று சாதனை புரிந்துள்ளன. அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கேந்திரிய வித்யாலயா பள... மேலும் பார்க்க

அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரிப்பு: 3 போ் கைது

அரக்கோணத்தில் அரசு முத்திரையுடன் போலி பட்டா தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்த மூவரை வருவாய்த் துறையினா் பிடித்து நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். அரக்கோணம் நகரில் சிலா் போலி பட்டாவை அரசு முத்... மேலும் பார்க்க