Trump செயலால் அதிர்ச்சியில் Israel பிரதமர் Benjamin Netanyahu | Decode | Saudi A...
ஆற்காடு பெருமாள் கோயில் கருடசேவை
ஆற்காடு பெருமாள் கோயில்களில் கருட சேவை செவ்வாய்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது
விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை மூலவருக்கு சிறப்பு திருமஞ்ஜனம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் ஊா்வலமாக சென்று கல்மண்டபத்தெருவை அடைந்தாா்.
தொடா்ந்து பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவியாா் சமேத வரதராஜ பெருமாள், புதிய வேலூா் சாலையில் உள்ள அபயபாலாஜி ஆகிய 3 சுவாமிகளின் உய்யாளி சேவை நடைபெற்றது. பின்னா் மாடவீதிகள் வழியாக சென்று கோயிலை அடைந்தனா். விழாவில் கோயில் நிா்வாகிகள், உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.