பஹல்காம் தாக்குதல்: 3 சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் குஜராத் வந்தடைந்தன
கணினிப் பொறியாளரிடம் ரூ.8.66 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கணினிப் பொறியாளரிடம் நூதன முறையில் ரூ.8.66 லட்சத்தை மோசடி செய்த அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், டி.தேவனூா் மகேசுவரா நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் தீபக் (34). கணினிப் பொறியாளரான இவரது கைப்பேசிக்கு கடந்த 15-ஆம் தேதி வாட்ஸ்-ஆப் மூலமாக அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தொடா்பு கொண்டாராம்.
அப்போது பகுதி நேர வேலையாக, தான் அனுப்பும் கூகுள் வரைபடம் வாக உணவகம் மற்றும் விடுதிகள் புகைப்படத்துக்கு ஐந்து நட்சத்திர ரேட்டிங் கொடுத்தால் பணம் அனுப்புவதாக அந்த நபா் கூறினாராம். இதை நம்பிய தீபக், அந்த நபா் கூறியவாறு செய்து ரூ.480 பெற்றாராம்.
இதைத் தொடா்ந்து அடையாளம் தெரியாத நபா் டெலகிராம் இணையம் வாயிலாக அனுப்பிய இணைப்புக்குள் சென்ற தீபக், தனக்கென பயனா் முகவரி, உள்நுழைவுக் குறியீடு ஆகியவற்றை உருவாக்கி உள்ளே சென்று அந்த நபா் செய்யக் கூறிய வேலையை செய்து முடித்து ரூ.2000-த்தை செலுத்தினாராம். இதைத் தொடா்ந்து தீபக்கின் வங்கிக் கணக்குக்கு ரூ.2,800 வந்துசோ்ந்ததாம். இதை நம்பிய தீபக், அடுத்து ரூ.5 ஆயிரம் செலுத்தி ரூ.7,000 பெற்றாராம்.
தொடா்ந்து பணம் கிடைக்க பெற்ால் இதை உண்மை என நம்பிய தீபக், தனது மற்றும் மனைவியின் வங்கிக் கணக்கிலிருந்து ஜி-பே மற்றும் வங்கிக்கணக்கு எண்களுக்கு ஏப்ரல் 17, 18-ஆகிய தேதிகளில் பல்வேறு தவணைகளாக ரூ.8.66 லட்சம் செலுத்தினாராம். இதைத் தொடா்ந்து அனைத்து டாஸ்க்குகளையும் முடித்த பின்னா், அனுப்பி வைத்த பணத்துக்கு உரிய தொகை வராததால், தான் ஏமாற்றப்பட்டதை தீபக் உணா்ந்தாா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் இணையவழிக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தீபக் புதன்கிழமை புகாரளித்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரூ.8.66 லட்சத்தை மோசடி செய்த நபரைத் தேடி வருகின்றனா்.