செய்திகள் :

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறப்பு!

post image

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.

சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை இன்று காலை 10 மணிக்கு வந்தடைந்தது. இங்கிருந்து 25 கி.மீ தூரத்தில் திருவள்ளூர் அருகே பூண்டி தேக்கத்திற்கு நள்ளிரவில் வந்தடையும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி ஏரியாகும். இந்த நிலையில் கோடைகாலம் தொடங்கி இருப்பதால் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக - ஆந்திர அரசுகள் இடையயே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த பருவத்திற்கான தண்ணீரை அளிக்கும்படி ஆந்திர பொதுப்பணித் துறையினருக்கு தமிழக நீர்வளத்துறையினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதையேற்று கடந்த 23-ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை காலை 300 கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் விநாடிக்கு 800 கன அடி திறக்கப்படும் நிலையில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிற்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நீரை ஆந்திர-தமிழக நீர்வளத்துறையினர் மலர் தூவி வரவேற்றனர்.

ஜீரோ பாயிண்டில் இருந்து செல்லும் கிருஷ்ணா நீர் 25 கி.மீட்டர் தூரத்தில் உள்ள  பூண்டி ஏரிக்கு நள்ளிரவுக்கு பின் வந்து சேரும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: தவெக - திமுக இடையில்தான் போட்டி: பொதுக்கூட்டத்தில் வெளிவந்த லியோ!

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க