கௌதம் கம்பீரை குறுகிய காலத்தில் மதிப்பிடுவது நியாயமல்ல: முன்னாள் வீரர்
கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்: தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்!
கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடசென்னைக்கு தாழ்வான பகுதிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக தண்டையார்பேட்டை ஐஓசி பகுதிகளில் முழங்காலுக்கும் மேல் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நேற்றிலிருந்து பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மழைநீர் தேங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீர் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி கீழே விழக்கூடிய அபாயத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர்.