செய்திகள் :

கனமழை: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

post image

சென்னை: கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகரும்.

இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அடுத்த 4 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், டிச.12-ஆம் தேதி சென்னை தொடங்கி தூத்துக்குடி வரை உள்ள கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், டெல்டா பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, அரியலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறனகா் பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்த நிலையில், டிச.12- ஆம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னையில், புதன்கிழமை இரவு முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை (டிச.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்று கனமழை காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவாரூர், தூத்தூக்குடி, ராமநாதபுரம், திண்டுக்கல், சேலம், கரூர், நாகப்பட்டினம், நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 5 வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று திருவண்ணமாலை, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தென் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

சென்னையில் மாலைக்குப் பின் மழை இருக்காது!

தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர... மேலும் பார்க்க

கனமழை: சென்னையில் 6 விமானங்கள் ரத்து!

தொடர் கனமழை காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழக்கிழமை இல... மேலும் பார்க்க

"கூடங்குளம், கல்பாக்கம் மின் பகிர்வு விவகாரத்தில் புரிந்துணர்வுடன் ஒருமித்த கருத்து நிலவுகிறது'

நமது சிறப்பு நிருபர்கூடங்குளம், கல்பாக்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மாநிலத்துக்கே வழங்கக் கோரும் விவகாரத்தில், கூட்டாட்சி புரிந்துணர்வின்படியே மத்திய, மாநில அரசுகள் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு... மேலும் பார்க்க

விரைவு ரயில் வேகம் குறைப்பு: தமிழக எம்.பி.க்கள் கேள்வி

நமது சிறப்பு நிருபர்நாடு முழுவதும் பல்வேறு மார்க்கங்களில் அதிவிரைவு ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவது குறித்தும் விரைவு ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டது குறித்தும் மக்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.ப... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: டி.ஆர். பாலுக்கு ரயில்வே அமைச்சர் பதில்

நமது சிறப்பு நிருபர்கும்மிடிப்பூண்டி ரயில் விபத்துக்கும் "கவச்' தொழில்நுட்பத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வ... மேலும் பார்க்க