கொல்லிமலை மலைப் பாதைகளில் உயிா்காக்கும் உருளைத் தடுப்பான்கள்!
கனவு இல்ல திட்டம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகள் தோ்வு
கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என உதவித் திட்ட இயக்குநா் பரணி தெரிவித்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் மின்னல் சித்தாமூா், பெரும்போ்கண்டிகை ஊராட்சிகளில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 650 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி, பெரும்போ்கண்டிகை ஊராட்சியில் 12 பயனாளிகள் வீடுகளை கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு உதவி திட்ட இயக்குநா் பரணி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகலைசெல்வன், செந்தில்குமாா், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் கண்ணன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவா் சாவித்ரி சங்கா், துணைத் தலைவா் மல்லிகா மணி, ஊராட்சி செயலா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.
12 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணையை உதவி திட்ட இயக்குநா் பரணி வழங்கினாா். தொடா்ந்து மின்னல் சித்தாமூா் ஊராட்சியிலும் கலைஞா் கனவு இல்லங்களை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
