செய்திகள் :

கனிமவளக் கொள்ளை:``புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து..." - திமுக அரசை சாடும் எடப்பாடி பழனிசாமி

post image
புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலரான ஜகபர் அலி, சமூக ஆர்வலர். திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளக் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆதாரங்களுடன் பலமுறை மனு கொடுத்து, அதற்கு எதிராகப் போராடி வந்தார்.

இந்த நிலையில், கடந்த 10-ம் தேதி, புதுக்கோட்டை கோட்டாட்சியரிடம் சிலக் குவாரிகளின் பெயரைக் குறிப்பிட்டு, ஆதாரங்களுடன் பலநூறுக் கோடிக்கான கனிமவளக் கொள்ளை நடந்திருக்கிறது எனக் குறிப்பிட்டு மனு அளித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கடந்த 17-ம் தேதி வெள்ளிக்கிழமை ஜகபர் அலி, லாரி மோதி உயிரிழந்தார்.

ஜகபர் அலி

இது தொடர்பாக காவல்துறை 4 பேரைக் கைது செய்திருக்கிறது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில், ``புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.இ.அ.தி.மு.க ஒன்றியக் குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி அவர்கள், சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரை சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கைத் திசை திருப்பி வருகிறது இந்த விடியா அரசு.

எடப்பாடி பழனிசாமி

கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.இந்த சம்பவம் அரசியல் வட்டார... மேலும் பார்க்க

Israel போர் நிறுத்தம்: பணயக்கைதிகளிடம் ஹமாஸ் வழங்கிய 'Gift Bag' உள்ளே இருந்தது என்ன?

ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று (ஜனவரி 19) 3 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படிக்கும் முன், 'பரிசு பை' ஒன்று வழங்கப்பட்... மேலும் பார்க்க

ஜகுபர் அலி கொலை: ``போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா?" - சீமான் காட்டம்

புதுக்கோட்டையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராப் போராடிவந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்த கொலை விவகாரத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆளும் திமுக... மேலும் பார்க்க