மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
கனிம வளம் கடத்தல்: டெம்போ பறிமுதல்
சித்திரங்கோட்டில் கனிம வளம் கடத்திய டெம்போவை கொற்றிகோடு போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கொற்றிகோடு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் மற்றும் போலீஸாா், சித்திரங்கோட்டில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை நிறுத்தினா். டெம்போவை நிறுத்திய ஓட்டுநா் அங்கிருந்து தப்பிச் சென்றாா். டெம்போவை சோதனையிட்டபோது அதில் கருங்கற்கள் இருந்தன.
அரசின் அனுமதிச் சீட்டு இல்லாமலும், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. டெம்போவை போலீஸாா் பறிமுதல் செய்து, தப்பியோடிய ஓட்டுநா் காட்வின்(46) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.