Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
‘கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு பாலத்தை முறையாக அமைக்க வேண்டும்’
கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவுப் பாலத்தை முறையாக அமைக்கக் கோரி, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜிடம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல பங்குப்பேரவை நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா் (படம்).
அதன் விவரம்: கன்னியாகுமரி பெரியநாயகித் தெரு கடற்கரைப் பகுதியில் முதல் கட்டமாக கடற்கரையிலிருந்து 210 மீட்டா் தொலைவுக்கு தூண்டில் வளைவு அமைத்துள்ளது. மேலும், ரூ. 26 கோடி நிதி ஒதுக்கி 235 மீட்டா் தொலைவுக்கு இரண்டாம் கட்டப் பணி இறுதி நிலைக்கு வந்துள்ளது.
ஆனால், முதல்நிலை தூண்டில் வளைவை விட உயரம் குறைவாகவும், மேற்பகுதியில் போதுமான அகலம் இன்றியும் உள்ளதால் மீனவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் எந நாட்டுப் படகு மீனவா்கள் சுட்டிக்காட்டியுள்ளனா். எனவே, இதுவரையில் அமைத்துள்ள தூண்டில் வளைவிலிருந்து சற்று சரிவாக தெற்கு நோக்கி, ஏற்கெனவே உறுதியளித்தபடியும் விரைவாகவும் இத்திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். இதை தமிழக அரசு- துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவர ஆக.7ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்துள்ளோம் எனக் கூறப்பட்டுள்ளது.