செய்திகள் :

கன்னி ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

post image
கன்னி ராசியில் பிறந்த நீங்கள், எளிமையான வாழ்க்கையும், எதார்த்தமான பேச்சும் கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங்கே!

1. உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். 

2. பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்து என வீடு களைகட்டும்.  கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள். பழைய சொந்தபந்தஙகள் தேடி வருவார்கள். 

3. இந்தாண்டில் சனி 6-ம் வீட்டில் நீடிக்கும் நிலையில், எதிர்த்த வர்கள் நண்பர்களாவார்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் வேலை யைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

4. சிலருக்குச் சொத்து சேரும். தந்தையாருடனான கருத்து மோதல்கள் நீங்கும். அவருக்கு இருந்த நோய் விலகும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

5. உங்கள் ராசிக்கு லாப வீட்டில் செவ்வாய் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களின் நிர்வாகத்திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கன்னி

6. எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள்.

7. வாழ்க்கைத் துணைவர் வழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். சிக்கனமாகச் செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

8. ஏப்ரல் 25 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மனஇறுக்கம் வந்துசெல்லும்.

9. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வாழ்க்கைத் துணை வருக்குத் தைராய்டு பிரச்னைகள் ஏற்படலாம்.

10. ஏப்ரல் 26 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12-ம் வீட்டிலும், ராகு 6-ம் வீட்டிலும் அமர்வ தால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். 

11. தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். வாழ்க்கைத் துணைவருடன் இருந்து வந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்கியம் சீராகும்.

12. திருமணம் முதலான சுபகாரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

13. புத்தாண்டின் தொடக்கம் முதல் 10.5.2025 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும்.

14. வெளிவட்டாரத்தில் உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி, பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

15. நீண்ட நாள்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

கன்னி

16. மே 11 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் குழம்புவீர்கள். வீண் பதற்றமும் பயமும் தேவையில்லை.

17. சட்டத்திற்குப் புறம்பான வகையில், யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள்மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சி செய்வார்கள். அவசியத் தேவையில்லாமல் யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். இல்லையெனில், சில நேரம் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்வீர்கள். ஆகவே, கவனம் தேவை.

18. வியாபாரிகளே! அதிக முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகைத் திட்டங்களை அறிவிப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாள்களை பணியில் சேர்ப்பீர்கள். அறிமுகமானவர் என்றாலும் கடன் தரவேண்டாம்.

19. புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத் தொழிலில், பங்குதாரர்கள் கோபம் உண்டாகும் விதம் பேசினாலும், நீங்கள் அவசரப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம்.

20. இந்தப் புத்தாண்டில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் வியாபாரத்தில் லாபம் உண்டு. உணவு, இரும்பு, கட்டட பொருள்கள், கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

21. உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களுடன் மனத்தாங்கல் வரும். உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கவில்லையே என வருந்துவீர்கள். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டு. 

22. கணினித் துறையினரே, வேலைகளில் கவனச் சிதறல் கூடாது. வருடத்தின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரியுடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

கன்னி

23. புதிய சொத்து - வாகனச் சேர்க்கைச் சிலருக்கு உண்டு. எனினும் சொத்து ஆவணங்களில் கவனம் தேவை. புதிய முதலீடுகள் செய்யும் போது, அனுபவசாலிகளின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது.

24. பணி சார்ந்த படிப்புகள், வெளியூர்ப் பயணங்களில் சிற்சில தடைகளும் தாமதமும் உண்டாகலாம். வீட்டு விஷயங்களை வெளியே பகிரவேண்டாம். 

25. குடும்பத்துடன் ஒருமுறை பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள். சங்கடஹர சதுர்த்தி தினத்தில், அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள் நன்மைகள் நடக்கும்.

2025 -ல் என்ன நடக்கும்? `போர், எழுச்சிபெறும் நாடு..' - ஒரே மாதிரி கணித்த பாபா வாங்கா, நாஸ்ட்ராடமஸ்

2025ம் ஆண்டு பிறக்கிறது. ஒவ்வொரு வருட பிறப்பிலும் இந்த ஆண்டு நமக்கு ராசியானதாக அமையுமா என்பதை ஜோதிடம் பார்த்து அறிந்துகொள்ள விரும்புவர். இதேப்போல மொத்த உலகத்துக்கும் ஜோதிடம் சொன்ன தீர்க்கதரிசிகள் உள்ள... மேலும் பார்க்க

ஷெல்வீ | 2025 - மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் | Shelvi New Year Rasi palan

ஜோதிடர் ஷெல்வி கணித்துச் சொல்லும் 2025 - ம் ஆண்டு 12 ராசிகளுக்குமான பலன்கள்... பரிகாரங்கள். மேலும் பார்க்க

January Rasipalan ? | 12 ராசிகளுக்கும் பலன்கள், பரிகாரங்கள், அதிர்ஷ்ட தேதிகள் ? | ஜனவரி 2025

ஜனவரி மாதத்துக்கான 12 ராசிகளுக்குமான பலன்களை அதிர்ஷ்டத் தேதிகளோடு கணித்துச் சொல்கிறார் பாரதி ஶ்ரீதர். மேலும் பார்க்க

விருச்சிக ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் சகல அனுபவமும் பெற்றவர்; விட்டுக் கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்டவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணி... மேலும் பார்க்க

மகர ராசி: 2025-ம் ஆண்டுக்கான 25 துல்லிய பலன் குறிப்புகள்

மகர ராசியில் பிறந்த நீங்கள், அன்பால் அனைவரையும் அரவணைப்பவர். உதவும் குணம் நிறைந்தவர். உங்களுக்கு 2025 புத்தாண்டு எப்படி? ஜோதிடரத்னா முனைவர் கே.பி. வித்யாதரன் கணித்த துல்லிய பலன்கள் - 25 குறிப்புகள் இங... மேலும் பார்க்க