கமுதியில் மினி மாரத்தான் போட்டி
துணை முதல்வா் உதயநிதி பிறந்தநாளையொட்டி, கமுதியில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கமுதி ஒன்றியச் செயலா் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியை பிரபு ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தாா். கோட்டைமேட்டில் இருந்து உலகநடை, கருங்குளம், மருதங்கநல்லூா், பசும்பொன் வழியாக 16 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் திருச்சி, சேலம், சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதில் முதலிடம் பிடித்த வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராணுவ வீரா் ஜெகதீஷ் (26) உள்ளிட்ட முதல் 20 இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு பிரபு ராஜகண்ணப்பன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா்.
இதில் திமுக ஒன்றியச் செயலா்கள் ஜெயபால் (சாயல்குடி), ஆறுமுகவேல்(கடலாடி), பூபதி மணி (முதுகுளத்தூா்), கோவிந்தன் (முதுகுளத்தூா் மத்தியம்), ஒன்றிய அவைத் தலைவா் கிழவராஜன், துணைச் செயலா்கள் நீதிராஜன், தங்கப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன், நாகமணி, முன்னாள் மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.