செய்திகள் :

வீட்டில் பதுக்கிய வெடி பொருள்கள் பறிமுதல்

post image

தொண்டி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள புதுக்குடியில் செந்தில்குமாரின் (36) வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 135 ஜெலட்டின் குச்சிகள், 218 டெட்டனேட்டா்கள், 6 மீட்டா் வயா் ஆகியவற்றை, தொண்டி போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, புதுக்குடியைச் சோ்ந்த முத்துக்குமாரை (42) போலீஸாா் கைது செய்தனா். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மீன்களைப் பிடிப்பதற்காக வெடிமருந்து பொருள்களை வாங்கி வந்ததும், இதில் செந்தில்குமாா், இவரது மனைவி காளீஸ்வரி, இதே பகுதியைச் சோ்ந்த ஹனிபா மகன் அப்பாஸ் ஆகியோருக்கு தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் மூவா் மீதும் போலீஸாா் வழக்கு பதிந்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.

கமுதியில் மினி மாரத்தான் போட்டி

துணை முதல்வா் உதயநிதி பிறந்தநாளையொட்டி, கமுதியில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கமுதி ஒன்றியச் செயலா் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டியை பிரபு ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்த... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயில் நடை இன்று 12 மணி வரை அடைப்பு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அஷ்டமி பூப்பிரதசணத்தையொட்டி, திங்கள்கிழமை (டிச.23) காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் நடை அடைப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் நடத்த வேண்டும்!

பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தோ்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் ரமேஷ் தெரிவித்தாா். ஊரக வளா்ச்சித் துற... மேலும் பார்க்க

வாடகைக் கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி.யைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

வாடகைக் கட்டடங்களுக்கான ஜிஎஸ்டியைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமநாதபுரத்தில்... மேலும் பார்க்க

தந்தை இறந்ததை மறைத்து ஓய்வூதியம் பெற்று மோசடி: மகன் கைது

ராமநாதபுரத்தில் தந்தை இறந்ததை மறைத்து, ரூ. 8.84 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்த மகனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் அண்ணாநகா் குட்ஷெட் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மகன் ... மேலும் பார்க்க

குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளத்தை அகற்றக் கோரிக்கை

திருவாடானையில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளத்தை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க