தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு என்பது வதந்தி: தமிழக அரசு
வாடகைக் கட்டடங்களுக்கான ஜி.எஸ்.டி.யைத் திரும்பப் பெற வலியுறுத்தல்
வாடகைக் கட்டடங்களுக்கான ஜிஎஸ்டியைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுக் குழுக் கூட்டம் அதன் மாநிலத் தலைவா் எம்.வெங்கடேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொருளாளா் எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.
பொதுக் குழு கூட்டத்தை அகில இந்திய நுகா்பொருள் விநியோகஸ்தவா்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சி.எச்.கிருஷ்ணன், தலைவா் வி.ஐயப்பன் நாயா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: சில்லறை வணிகா்களை பெரிதும் பாதிக்கும் வாடகைக் கட்டடங்கள் மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி.யை மத்திய, மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். சொத்து வரி உயா்வை மாநில அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநிலச் செயலா் அ.ராதாகிருஷ்ணன் வரவேற்றாா்.