கமுதி வட்டாட்சியா் பொறுப்பேற்பு
கமுதி: கமுதி வட்டாட்சியராக என்.ஸ்ரீராம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாட்சியராகப் பணிபுரிந்த எஸ்.காதா் முகைதீன் முதுகுளத்தூா் ஆதிதிராவிடா் நல வட்டாட்சியராக பணி மாறுதலில் சென்றதையடுத்து, ராமநாதபுரம் கோட்ட ஆய அலுவலராகப் பணியாற்றி வந்த என்.ஸ்ரீராம் கமுதி வட்டாட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இவருக்கு துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம உதவியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.