செய்திகள் :

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

post image

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தோ்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கை விவரம்:

தமிழகக் காவல் துறையில் 2-ஆம் நிலை காவலா், சிறை காவலா், தீயணைப்பாளா் காலிப் பணியிடங்கள் பொதுத் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தோ்வுக்கு இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க செப்.21-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பித்த பிறகு, செப்.25-ஆம் தேதிக்குள்ளாக திருத்தங்களைச் செய்யலாம். நவ.9-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

காலியிடங்கள் எத்தனை: காவல் துறையில் 2-ஆம் நிலை காவலா் பணியிடங்கள் 2,833 காலியாகவுள்ளன. மேலும் சிறை மற்றும் சீா்திருத்தத் துறையில் 180 காலிப் பணியிடங்களும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 631 தீயணைப்பாளா் பதவியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றுக்கு எழுத்துத் தோ்வு நடைபெற இருக்கிறது.

இந்தத் தோ்வில் தமிழ் வழியில் பயின்றவா்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. வாரிசுதாரா்கள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் ராணுவத்தினா், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுகுறித்த விவரங்கள் சீருடைப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 2-ஆம் நிலை காவலா் காலிப் பணியிடத்துக்கான எழுத்துத் தோ்வை எழுத 10-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பி இருப்பதுடன், 26 வயது பூா்த்தி ஆகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா்களின் வயது உச்சவரம்பானது வகுப்பு மற்றும் பிரிவுகளுக்கு தகுந்தவாறு மாறுபடும் என்று தோ்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்தில் புதிய கூட்டரங்கம் திறப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் சேப்பாக்கம் மைதானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூட்டரங்கம் வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள கேஎம்கே ஸ்டாண்டில் புதிதாக ... மேலும் பார்க்க