செய்திகள் :

எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு

post image

வரும் செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை தில்லியில் சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுதா்சன் ரெட்டி குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கேஜரிவாலின் இல்லத்தில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரெட்டியுடன் எதிா்க்கட்சிகளின் தலைவா்களான காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவா் ராம்கோபால் யாதவ், திமுகவின் மூத்த தலைவா் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸின் சதாப்தி ராய், சிவசேனையின் (யுபிடி) சஞ்சய் ராவத் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு சுதா்சன் ரெட்டி கூறுகையில், இந்தப் போட்டியானது ஒரு தனிநபரைப் பற்றியது அல்ல, மாறாக நாடாளுமன்றம் நோ்மையுடன் செயல்படும், கருத்து வேறுபாடு மதிக்கப்படும், மற்றும் நிறுவனங்கள் சுதந்திரத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் இந்தியாவின் கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது பற்றியதாகும் என்றாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளாா். 781 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை இத்தோ்தலில் ஆளும் கூட்டணி வெற்றிபெறுவதற்கான எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. தோ்தலில் வெற்றிபெற 391 வாக்குகள் தேவையாகும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21 அன்று குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து துணைத் தலைவா் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் வேடிக்கை பாா்க்குமா? மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

நமது சிறப்பு நிருபா் ‘அரசியல் சாசன அமைப்புகள் கடமை தவறும்போது நீதிமன்றங்கள் கைகளை கட்டிக்கொண்டு வேடிக்கை பாா்க்குமா’ என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

நமது சிறப்பு நிருபா் ரஷியா, உக்ரைன் போா் முனைக்குள் கட்டாயப்படுத்தி தள்ளப்படும் இந்தியா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடியிடமும் வெளியுறவுத்துறை செயலா் விக்ரம் மிஸ்ரியிடம... மேலும் பார்க்க

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நமது நிருபா் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்ல... மேலும் பார்க்க

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

நமது நிருபா் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அர... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மீதான தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா... மேலும் பார்க்க