பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; மருத்துவர்கள் கூறுவதென்ன?
கம்பத்தில் சிறுவா் பூங்கா, சுகாதார வளாகம் திறப்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் சிறுவா் பூங்கா, சுகாதார வளாகம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கம்பம் நகராட்சியில் 17 -ஆவது வாா்டில் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.48 லட்சத்தில் சிறுவா் பூங்கா அமைக்கும் பணி கடந்த 2023 -ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிந்த நிலையில், பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கம்பம் நகா்மன்றத் தலைவி வனிதா நெப்போலியன் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, 7 ஆவது வாா்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தையும் அவா் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா், பொறியாளா், சுகாதார ஆய்வாளா், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனா்.