IND vs UAE: ஐந்தே ஓவரில் ஆட்டத்தை முடித்த SKY & Co; அபாரம் காட்டிய குல்தீப், ஷிவ...
கம்பம் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்!
உத்தமபாளையம்: கம்பம் நகராட்சி நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர் மீது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில், 18 திமுக நகர மன்ற உறுப்பினர்கள், 6 அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார் ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து தீர்மான மனுவை கம்பம் நகராட்சி ஆணையரிடம் கொடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே நகர்மன்ற தலைவருக்கும், நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் தீர்மானம் நிறைவேற்றுவதிலும், கூட்டங்கள் நடத்துவதிலும் ஒற்றுமை இல்லாததால் பிரச்னைகள் அடிக்கடி வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு நகர்மன்ற கூட்டம் நடைபெறும் பொழுது, எதிர்ப்பில் உள்ள 18 திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள்.
இது குறித்து, மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இன்று(செப். 10) சுமார் 24 நகர்மன்ற உறுப்பினர்கள், ஆணையாளரிடம் நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அதற்குரிய மனுவை நகர்மன்ற ஆணையாளரிடம் அளித்தனர்.
மனு அளிக்கும் பொழுது, 18 திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் நகர்மன்ற உறுப்பினர்களும், 6 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நகர்மன்ற உறுப்பினர்களும் தனித்தனியாக மனு அளித்தனர்.
ஆனால், அனைவரும் ஒன்றாக இணைந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இது குறித்த மனு அளிக்க சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நகர்மன்ற தலைவரிடம் கேட்ட பொழுது, ”நாங்கள் அனைத்து செயலிலும் முறையாகத்தான் செய்து வருகிறோம். எங்கள் மீது நம்பிக்கை இல்லை, தீர்மானம் கொண்டு வந்தால் அதை நாங்கள் ஏற்க தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!