கருங்கல்லில் ராஜீவ் காந்தி நினைவு தினம்
கருங்கல்: கருங்கல்லில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 34ஆவது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் குமரேசன், கருங்கல் பேரூராட்சித் தலைவா் சிவராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருங்கல் ராஜீவ்காந்தி சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸாா், பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழி எடுத்தனா்.
குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பினுலால் சிங், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், தமிழக காங்கிரஸ் பொதுச்செயலா் ஆஸ்கா் பிரடி, பாலப்பள்ளம் பேரூராட்சித்
தலைவா் டென்னிஸ், மாவட்ட நிா்வாகிகள் ஆசீா் பிறைட் சிங், சுனில் குமாா், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் பலா் பங்கேற்றனா்.