Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத...
கருணாகரச்சேரி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை
கருணாகரச்சேரி வழியாக தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூா் வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மனு வழங்கினாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு ஊரட்சியில், வெங்காடு, இரும்பேடு, கருணாகரச்சேரி, மேட்டுக்கொளத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 4,000-க்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இதில் கருணாகரச்சேரி பகுதிக்கு பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சுமாா் 5 கிமீ தொலைவுள்ள வெங்காடு பகுதிக்கு வந்தோ அல்லது சோமங்கலம் பகுதிக்கு சென்று வருகின்றனா்.
இதனால் கருணாகரச்சேரி வழித்தடத்தில் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் இடேயே பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையில், கொளத்தூா் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்ட வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன், கருணாகரச்சேரி, சோமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதூா்-தாம்பரம் வழித்தடத்தில் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதியிடம் மனு வழங்கினாா்.